• February
    27
    Thursday

Main Area

Mainமுதல்வராக மு.க.ஸ்டாலின் வியூகம்... பாஜகவை நாடும் திமுக..!

மோடி
மோடி

எப்பாடு பட்டாவது பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் எனத் துடிக்கிறார் மு.க. ஸ்டாலின். இந்த வேவ்லெந்த் போதாதா..? இப்போது காங்கிரஸை கழற்றி விடத்துடிக்கிறது திமுக.  

இதற்கான முன்னெடுப்புகளை தொடுத்தது பாஜக. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, திமுக புள்ளிகளை தொடர்பு கொண்ட பாஜக மையப்புள்ளிகள், காங்கிரசை என்கரேஜ் செய்யவேண்டாம் என்று தேனில் குழைத்த கருத்துக்களை எடுத்து கூறியுள்ளனர். இதன்விளைவாக கொஞ்ச நாட்களாகவே இந்த டெல்லி தூபம்  அறிவாலயத்தில் வேலையை காட்டத் தொடங்கியது. காங்கிரஸ் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற கருத்து திமுக நிர்வாகிகள் மட்டத்தில் பரப்பப்பட்டது. ஆனால் ஸ்டாலின் மனதில் எந்த சலனமும் இல்லை. 

amit shah

வழக்கம்போல பாஜக எதிர்ப்பை மிக வலுவாக உயர்த்திப் பிடித்தார். பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கடுமையாக குற்றம் சாட்டினார். தமிழகமெங்கும் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் போர் முழக்கம் செய்தார். இதனால் திக்குமுக்காடிய பாஜக மேலிடம் மீண்டும் அந்த குடும்ப புள்ளியை டெல்லிக்கு அழைத்து சில வாக்குறுதிகளை இடம் தந்தது. அதில் முதலாவது உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம். இரண்டாவது அதிமுகவை நாங்கள் இனி என்கரேஜ் செய்ய மாட்டோம் என்பது. 

இதில் இரண்டாவது வாக்குறுதி திமுக தலைமைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் டெல்லி இரட்டையர்களை அடைந்ததும் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தச் சூழலில்தான் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. உடனடியாக களத்தில் இறங்கி மந்திரிக்கப்பட்ட திமுக புள்ளிகள் அந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்க படாமல் பார்த்துக்கொண்டனர். அதன் விளைவாக அழகிரி டென்ஷனாகி கூட்டணி திரும்ப அறிக்கை விட விஷயம் பற்றிக்கொண்டது. 

stalin

அந்தத் தீ பெரிதாக்கும் வேளையில் அந்தப் புள்ளிகள் தீவிரமாக இறங்கினார். ஸ்டாலினிடம் சென்று இந்த விவகாரத்தைப் பற்றி பேசி அவரை டென்ஷன் ஆக்கினர். அதன் வெளிப்பாடாக திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் காங்கிரஸ் வாக்கு வங்கி பற்றி கடுமையாக விமர்சிக்க அதற்கு இதெல்லாம் வேலூர் இடைத் தேர்தலுக்கு முன்பு தெரியவில்லையா என்று துறைக்கு பதிலடி கொடுத்தார்கள்.

நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போகும் இந்த விரிசல் இன்னும் அதிகமாகும் அல்லது தணிந்து போகுமா என்பதை அடுத்து வரும் நாட்களில் தெரியும். ஆக அதிமுகவிடம் இருந்து காங்கிரஸை தனிமைப்படுத்தி வேலையில் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து கொண்டிருக்கிறது பாஜக மேலிடம் என்பதே தற்போதைய நிலவரம். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் மு.க.ஸ்டாலின் கூட்டணி தர்மத்தைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பாஜக பக்கம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2018 TopTamilNews. All rights reserved.