மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

 

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தகவலை உதயநிதி ஸ்டாலினும் பகிர்ந்தார்.

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்தியாவில் மரணம் அடைந்த மருத்துவர்கள் 175 பேர் என்றும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் 43 பேர் என்றும் செய்தி வந்தது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியா முழுவதும் இதுவரை 196 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இன்று ஐ.எம்.ஏ தகவல் தந்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல!” எனக் குறிப்பிட்டுள்ளார்.