‘முதலமைச்சர் பதவி மு.க ஸ்டாலினின் கனவு’ – முதல்வர் விமர்சனம்!

 

‘முதலமைச்சர் பதவி மு.க ஸ்டாலினின் கனவு’ – முதல்வர் விமர்சனம்!

திமுகவினர் மக்கள் கிராம சபைக் கூட்டி, மக்கள் மத்தியில் நாடகமாடுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வாசகத்தை முன்வைத்து ஒவ்வொரு மாவட்டமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, திமுக முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் சென்றிருக்கிறார்.

‘முதலமைச்சர் பதவி மு.க ஸ்டாலினின் கனவு’ – முதல்வர் விமர்சனம்!

செல்வபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், அதிமுகவை பொறுத்தவரையில் மக்கள் தான் முதல்வர்; ஆனால் திமுகவை பொறுத்தவரை முதல்வர் பதவி ஸ்டாலினின் கனவு என விமர்சித்தார். தொடர்ந்து குறைகளை சுட்டிக்காட்டினால் திமுகவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று கூறிய அவர், அப்பாவி பெண்ணை திட்டமிட்டு தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு.க.வின் திட்டம் என்று கூறிய முதல்வர், கடந்த முறை தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.