இதை மட்டும் செய்யாதீங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

 

இதை மட்டும் செய்யாதீங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதை மட்டும் செய்யாதீங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

அந்த கடிதத்தில், “இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். கடல்சார் மீன்வள மசோதா இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மாநிலங்களுக்கான உரிமைகளை பாதிக்கும் உட்பிரிவுகள் மசோதாவில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம். இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம்.

மசோதாவின் உட்பிரிவுகள் மீனவர்களுக்கு எதிராக உள்ளது. இதனால் அமைதியின்மை மற்றும் எதிர்ப்புகள் வலுக்க வாய்ப்புள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.