செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகமே கொரோனா வைரஸால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது செவிலியர்களும் மருத்துவர்களும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்களை போற்றும் தினம் இன்று. மே 12 – உலக செவிலியர்கள் நாள். 1965 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று செவிலியர்கள் தினத்தையொட்டி, கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் தலைவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், செவிலியர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், #COVID19 பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த #nursesday2021 வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.