ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை காலை 10 மணிக்கு மு.க. ஸ்டாலின் சந்திக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரியில் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

அதே சமயம் அதிமுக அரசை குற்றம் சாட்டி வரும் திமுக டெண்டர் முதல் பல்வேறு திட்டங்களில் அதிமுக அரசு ஊழல் செய்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் புழல் சிறை காத்திருக்கிறது என்றும் அவர் பகிரங்கமாக கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக ஆளுநரை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நாளை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேச உள்ளனர். தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.