ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? முதல்வர் நாளை ஆலோசனை

 

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? முதல்வர் நாளை ஆலோசனை

ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவருகிறது. ஊரடங்கு நிறைவடைய இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.