“கண்கள் பணித்தன; இதயம் இனித்தது” – ‘முதல்வர்’ தம்பியை சந்திக்கும் ‘அண்ணன்’ அழகிரி!

“கண்கள் பணித்தன; இதயம் இனித்தது” – ‘முதல்வர்’ தம்பியை சந்திக்கும் ‘அண்ணன்’ அழகிரி!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வரை முதல்வர் ஸ்டாலினை அழகிரி கரித்துக் கொட்டினார். தேர்தல் நெருங்க நெருங்க சவுண்ட் கம்மியாகி கொண்டே சென்றது. விரைவிலேயே நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை சேர்மன் பதவி அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொடுப்பதாக ஸ்டாலின் உறுதியளித்து தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் தான் தேர்தல் முடியும் வரை அழகிரி சைலண்ட் மோடில் இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“கண்கள் பணித்தன; இதயம் இனித்தது” – ‘முதல்வர்’ தம்பியை சந்திக்கும் ‘அண்ணன்’ அழகிரி!

தேர்தல் முடிந்து தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு வாழ்த்து தெரிவித்ததற்கும் ஒரு பாச பின்னணி உள்ளது. கண்கள் பணித்தன இதயம் இனித்தது போல அண்ணன் – தம்பியை இணைத்துவைத்தது செல்வி தான் என்கிறார்கள். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கி கொண்டு தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற சென்றிருக்கிறார் ஸ்டாலின். அப்போது அவருடன் சகோதரி செல்வியும் இருந்திருக்கிறார். அப்போது கண் கலங்கிய தயாளு அம்மாள், அழகிரியைப் பற்றி சைகையாலேயே பேசியிருக்கிறார்.

“கண்கள் பணித்தன; இதயம் இனித்தது” – ‘முதல்வர்’ தம்பியை சந்திக்கும் ‘அண்ணன்’ அழகிரி!

அப்போது செல்வி சும்மா இருக்காமல் அழகிரிக்கு போன் போட்டு ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத ஸ்டாலின் வேறு வழியில்லாமல் போனை வாங்கி அழகிரியிடம் பேசியிருக்கிறார். அவர் வாழ்த்து சொல்ல இவர் நன்றி சொல்ல கோபாலபுரமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறது. அதற்குப் பின்னர் தான் அழகிரி வெளிப்படையாக வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

“கண்கள் பணித்தன; இதயம் இனித்தது” – ‘முதல்வர்’ தம்பியை சந்திக்கும் ‘அண்ணன்’ அழகிரி!

ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு அண்ணனை அழைக்க, மகன் துரையை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது உதயநிதியும் துரையும் ஆரத்தழுவிக் கொண்டதை ஊரே மெச்சியது. இந்த தொடர் நிகழ்வுகள் மீண்டும் கைகள் இணையும் என்ற சமிக்ஞையை விடுத்திருக்கின்றன. விரைவிலேயே அண்ணன் – தம்பி சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.