“சொன்னது சொன்னது தான்… நீட் இல்லாத சூழலை ஸ்டாலின் உருவாக்குவார்” – கனிமொழி எம்பி உறுதி!

“சொன்னது சொன்னது தான்… நீட் இல்லாத சூழலை ஸ்டாலின் உருவாக்குவார்” – கனிமொழி எம்பி உறுதி!

விளாத்திகுளம் தொகுதி மக்கள் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்காக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்ற திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் முன்வந்திருக்கிறார். முறைப்படி தனது அலுவலகத்தை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கினார். தற்போது எம்எல்ஏ அலுவலகம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்துகொண்டு, தற்காலிக மருத்துவமனையைத் திறந்துவைத்தார்.

“சொன்னது சொன்னது தான்… நீட் இல்லாத சூழலை ஸ்டாலின் உருவாக்குவார்” – கனிமொழி எம்பி உறுதி!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தமிழ்நாட்டில் நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்துள்ளார். திமுக நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது. தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார்” என்றார்.