ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற மு.க.ஸ்டாலின்

 

ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 12வது முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஸ்டாலினை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். தமிழக முதலைமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா , கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு தலைமை செயலகம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற மு.க.ஸ்டாலின்

இதையடுத்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அவர், கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4000 என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்குவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். பிறகு ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைக்கப்பட்டு மே 16 முதல் அமலுக்கு வரும் என்றும், நகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், தனியார் மருத்துவமனையில் கொரோனா கட்டணத்தை அரசே செலுத்தும் உள்ளிட்ட முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் சென்னை சிஐடி காலனியில் அமைந்துள்ள ராசாத்தி அம்மாள் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். முதல்வராகி சிஐடி காலனி இல்லத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினை அவரது தங்கையும், எம்.பி.யுமான கனிமொழி வரவேற்றார்