‘கருணாநிதி பயன்படுத்திய’ அதே பேனாவை கையில் பிடித்த மு.க.ஸ்டாலின்!

 

‘கருணாநிதி பயன்படுத்திய’ அதே பேனாவை கையில் பிடித்த மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவும் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்ற ஸ்டாலினின் ஆசையும் இன்று நிறைவேறிவிட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைப்பதால், மக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

‘கருணாநிதி பயன்படுத்திய’ அதே பேனாவை கையில் பிடித்த மு.க.ஸ்டாலின்!

ஆனால், இந்த கொரோனா பாதிப்பு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். ஸ்டாலினை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கருணாநிதியின் ஆசியுடன் நல்லாட்சி அமைத்திட மு.க.ஸ்டாலினுக்கு பல தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பதவியேற்பு விழாவுக்கு பிறகு சென்னை தலைமை செயலகம் விரைந்த ஸ்டாலின், முதல்வரின் இருக்கையில் அமர்ந்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். பதவியேற்ற முதல் நாளே ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4,000, மகளிருக்கு பேருந்துகளில் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி விட்டார்.

‘கருணாநிதி பயன்படுத்திய’ அதே பேனாவை கையில் பிடித்த மு.க.ஸ்டாலின்!

இந்த நிலையில், கருணாநிதி பயன்படுத்திய அதே மாடல் பேனாவை மு.க.ஸ்டாலின் கையில் பிடித்திருப்பதாக திமுக தொண்டர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்நாள் அவரது கையெழுத்துகளை இட்டு பணிகளைத்தொடங்கியுள்ளார். அதற்காக அவர் Wality 69JT என்ற fountain பேனாவை பயன்படுத்தியுள்ளார். அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான தலைவர் கலைஞர் அவர்கள் உபயோகப்படுத்திய அதே மாடல் பேனாவை தற்போது முதல்வர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 500 ரூபாய். ஏற்கெனவே தமிழ்நாட்டில் கலைஞர் பேனா என அழைக்கப்படும் இந்த பேனா விற்பனை இனி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கருணாநிதி பயன்படுத்திய’ அதே பேனாவை கையில் பிடித்த மு.க.ஸ்டாலின்!

கருணாநிதி திறம்பட ஆட்சி புரிந்த இந்த மண்ணில், அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். கருணாநிதியின் வழியில் அவர் தமிழகத்தை வழி நடத்திச் செல்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனினும், பேனா முதற்கொண்டு அனைத்திலும் ஸ்டாலின், கருணாநிதி அவர்களின் வழியை பின்பற்றுவது உற்று நோக்கப்படுகிறது.