ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 ஆக இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96 ஆக உயர்வு! மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 ஆக இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96 ஆக உயர்வு! மு.க.ஸ்டாலின் கண்டனம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.53 காசுகள் உயர்ந்து  லிட்டருக்கு ரூ. 77.96  காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு 0.51 காசுகள் உயர்ந்து  ரூ. 70.64  காசுகளாகவும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96; ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64.

ஏழை – எளிய, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் #FuelPriceHike-ஐ உயர்த்தும் போக்கை மத்திய – மாநில அரசுகள் கைவிட வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.