ராகுல் காந்திக்கு கொரோனா… மு.க.ஸ்டாலின் கவலை!

 

ராகுல் காந்திக்கு கொரோனா… மு.க.ஸ்டாலின் கவலை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் கொரோனா உறுதியானது.

ராகுல் காந்திக்கு கொரோனா… மு.க.ஸ்டாலின் கவலை!

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், லேசான அறிகுறி இருந்த தனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்திருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தி விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்திக்கு கொரோனா… மு.க.ஸ்டாலின் கவலை!

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கொரோனா உறுதியான செய்திக் கேட்டு கவலை அடைந்ததாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்திக்கு கொரோனா பாசிட்டிவ் என கேள்விப்பட்டதில் மிகுந்த கவலை அடைந்தேன். அவர் முழு ஆரோக்கியம் பெற்று விரைவாக குணமடைய விரும்புகிறேன். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.