சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. மக்களை வதைக்கும் அரசுகள் : மு.க ஸ்டாலின் காட்டம்!

 

சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. மக்களை வதைக்கும் அரசுகள் : மு.க ஸ்டாலின் காட்டம்!

பெட்ரோல், டீசல் உயர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் வரிகளை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. மக்களை வதைக்கும் அரசுகள் : மு.க ஸ்டாலின் காட்டம்!

அதில், பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள். டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை உயர்வு மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். விலைவாசி கடுமையாக ஏறும்.

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும் இந்திய சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பு, மாநில அரசு சார்பிலான அறிவிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம். மக்களின் சுமையை குறைக்க வேண்டியது ஆள்வோரின் பொறுப்பு; உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்து விலை குறைப்புக்கு வழிபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.