“மானமே பெரிது, மரணத்தைத் துச்சமென நினைத்தவர்கள் மருது சகோதரர்கள்” – மு.க ஸ்டாலின் புகழாரம்!

“மானமே பெரிது, மரணத்தைத் துச்சமென நினைத்தவர்கள் மருது சகோதரர்கள்” – மு.க ஸ்டாலின் புகழாரம்!

மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கொடி ஏந்திய வீரர்களுள் முக்கியமானவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்டவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களுமான மருது சகோதரர்களை, கடந்த 1801 ஆண்டு அக்டோபர் 24ம் நாள் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்த நாள் ஆண்டுதோறும் மருது சகோதரர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

“மானமே பெரிது, மரணத்தைத் துச்சமென நினைத்தவர்கள் மருது சகோதரர்கள்” – மு.க ஸ்டாலின் புகழாரம்!

அந்த வகையில், இன்று அவர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் மதுரை தெப்பக்குளத்தில் இருக்கும் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தமிழக முதல்வர் பழனிசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“மானமே பெரிது, மரணத்தைத் துச்சமென நினைத்தவர்கள் மருது சகோதரர்கள்” – மு.க ஸ்டாலின் புகழாரம்!

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ” மண்ணைக் காக்கும் போரில் மானமே பெரிது என- மரணத்தைத் துச்சமென நினைத்த வீரமிகு மருது சகோதரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று! தாய் மண்ணைக் காக்க தமிழ் மன்னர்களை ஒருங்கிணைத்து, எதிரிகள்- துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.