“பாஜக அரசின் இந்தி ஆதிக்க – மொழிவெறியை கண்டிக்கிறேன்” – மு.க ஸ்டாலின் பதிவு!

 

“பாஜக அரசின் இந்தி ஆதிக்க – மொழிவெறியை கண்டிக்கிறேன்” – மு.க ஸ்டாலின் பதிவு!

தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் நாளுக்கு நாள் வலுக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஹிந்தியில் பதில் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அண்மையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது குறித்து திமுக எம்.பிக்கள் வில்சனும், சு.வெங்கடேசனும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

“பாஜக அரசின் இந்தி ஆதிக்க – மொழிவெறியை கண்டிக்கிறேன்” – மு.க ஸ்டாலின் பதிவு!

அந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹிந்தியில் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழக MP-க்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதிலளிக்கும் மத்திய அமைச்சகங்கள்; கண்டனத்திற்குப் பிறகே ஆங்கிலத்தில் பதில்! அலுவல் மொழிச் சட்டத்தையே மீறுவதா? பாஜக அரசின் இந்தி ஆதிக்க – மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.