‘குட்கா அரசின் ஆட்டம் முடியும்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

 

‘குட்கா அரசின் ஆட்டம் முடியும்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

கடந்த 2017ம் ஆண்டு தடையை மீறி திமுக சட்டப்பேரவைக்குள் குட்காவை எடுத்துச் சென்றது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா எளிதில் கிடைக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே குட்காவை திமுக எடுத்துச் சென்ற நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் உரிமைக் குழு 2ம் முறையாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

‘குட்கா அரசின் ஆட்டம் முடியும்’ – மு.க ஸ்டாலின் ட்வீட்!

குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரத்தானது திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் செல்லப்பட்டதன் நோக்கத்தை நீதிமன்றம் புரிந்து கொண்டதாக திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், #Gutkha விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே? குட்கா அரசின் ஆட்டம் முடியும்! என்று குறிப்பிட்டுள்ளார்.