சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் ட்வீட்!

 

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் ட்வீட்!

அண்ணா பல்ககைக் கழக துணை வேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தமிழக அரசிடம் கேட்காமலேயே துணை வேந்தர் சூரப்பா, சிறப்பு அந்தஸ்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியாக தெரிகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் ட்வீட்!

சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்லூரி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்லும். அதோடு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கல்விக் கட்டணம் உயர்வு, மாணவர்களுக்கான 65% இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும். இதனால், தன்னிச்சையாக செயல்பட்ட சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது.

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் ட்வீட்!

இந்த விவகாரத்தில், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும்.#DismissSurappa என முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.