சாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் – ஸ்டாலின்

 

சாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு நீண்ட நேரம் செல்போன் கடையை திறந்து வைத்ததாகவும், கூட்டமாக நின்று பேசியதாகவும் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து வருகிறது. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு கூட போலீசார் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தை கையகப்படுத்தி, விசாரணையை வழிநடத்த வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி இரவு நீண்ட நேரம் கடையை திறந்து வைத்ததாகவும், கடைக்கு வெளியே அதிக மக்கள் இருந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கூறி வந்தனர். ஆனால், இந்த சிசிடிவி காமரா காட்சியில் ஜெயராஜை மட்டும் அழைத்துச் செல்வது தெரிகிறது. ஃபெனிக்ஸ் இருசக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையம் செல்வதும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu -க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?” என பதிவிட்டுள்ளார்.