‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ : மகாகவியை நினைவுகூறும் மு.க.ஸ்டாலின்

 

‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’  : மகாகவியை நினைவுகூறும் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’  : மகாகவியை நினைவுகூறும் மு.க.ஸ்டாலின்

சுப்பிரமணிய பாரதி என்ற பெயர் தமிழ் மீது பற்றுகொண்டவர்களின் தாகத்தை தீர்க்கும் நதி என்று தான் சொல்ல வேண்டும். கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என சமூகத்தில் வலம் வந்த இவரை மகாகவி என்றும் அழைக்கின்றனர். சிறப்பான தமிழ் புலமை, நவீனத் தமிழ்க் கவிதை, இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என பல்வேறு தரப்பினரும் தொட்டுப்பார்க்க பயந்த காரணிகளை தொட்டதுடன் மட்டுமின்றி அடித்து தும்சம் செய்தவர் தான் இந்த முண்டாசுகவி. இந்த மகாகவியின் 139 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி – சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு.அவரது பிறந்தநாளில் ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ்! ” என்றார்.