ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக! அதற்கு பதில் ட்வீட் போட்ட ஸ்டாலின்

 

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக! அதற்கு பதில் ட்வீட் போட்ட ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக! அதற்கு பதில் ட்வீட் போட்ட ஸ்டாலின்

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சராக பதவியேற்கும் திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள். சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கிறார். அவருக்கு தமிழக பாஜகவின் சார்பில் எனது மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகிழ்வான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சி – உரிமை சார்ந்த புதிய அரசின் முயற்சிகள் நிறைவேறிட ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிடுவீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.