மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

 

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தடுப்பூசி விலை உயர்வு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவை உருவாக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150 ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.400 என விலை உயர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்? கடுமையான விலை உயர்வை அறிவித்திருப்பது மனித நேயமற்ற செயல். தடுப்பு நடவடிக்கைகளில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்.

ஜிஎஸ்டி வரியில் வரவேண்டிய நிதியே நிலுவையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியையும் முழுமனையாக வழங்கிடவில்லை. ஏற்கனவே மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் தமிழ்நாடோ அல்லது பிற மாநிலங்களோ தடுப்பூசி விலை ஏற்றத்தின் சுமையை எப்படி தாங்க இயலும்? தடுப்பூசியின் விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்திட வேண்டும். மத்திய அரசுக்கு விற்பனை செய்யும் விலையான தடுப்பூசி ஒன்றிற்கு 150 ரூபாய் என்ற விலைக்கே மாநிலங்களுக்கும் வழங்கிட தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப்பேசிட வேண்டும். அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.