சின்னக் கலைவாணருக்கு இப்படி ஒரு நிலையா? கலங்கும் மு.க.ஸ்டாலின்

 

சின்னக் கலைவாணருக்கு இப்படி ஒரு நிலையா? கலங்கும் மு.க.ஸ்டாலின்

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக் விரைவில் குணமடைய வேண்டும் முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ரஜினி, விஜயகாந்த் போன்ற திரைபிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். நடிகர் மட்டுமல்லாது தன்னார்வலர்களும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் பூரண குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

சின்னக் கலைவாணருக்கு இப்படி ஒரு நிலையா? கலங்கும் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் ‘சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.