இதுவும் மத்திய- மாநில அரசுகளின் பெரிய தோல்வி : மு.க. ஸ்டாலின்

 

இதுவும் மத்திய- மாநில அரசுகளின் பெரிய தோல்வி : மு.க. ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததும் மத்திய – மாநில அரசுகளின் தோல்விதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையில், தமிழ்நாட்டில் தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது, சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என பொறுப்பின்மையை பாஜக அரசு காட்டிவருகிறது. உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என்று பெயர் சூட்டி பிரதமர் மோடி, தனது அரசின் நிர்வாக திறமையின்மையை திசை மாற்றுகிறார். அவர் இன்னும் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில்தான் இருக்கிறார்.

இதுவும் மத்திய- மாநில அரசுகளின் பெரிய தோல்வி : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் இதுவரை 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏன் அதிமுக அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப்பெறவில்லை. போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால்- அது எவ்வளவு மோசமான முடிவு? ஏன் இதனை அதிமுக அரசு எதிர்க்கவில்லை.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாதிலும் மத்திய – மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டன. அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பிவைக்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகளும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.