முதலமைச்சர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை- ஸ்டாலின்

 

முதலமைச்சர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை- ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வந்த நிலையில், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்யும் முதல்வர், மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் தொடக்கிவைத்து வருகிறார்.

முதலமைச்சர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை- ஸ்டாலின்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, இலவசமாக மக்கள் அனைவருக்கும் அரசின் செலவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.