• February
    21
    Friday

Main Area

Main



பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2வது இடம்! ஸ்டாலின் வேதனை

child abuse
child abuse

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என்பது ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் 73 சதவீத பாலியல் வன்கொடுமைகள் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்கு அறிந்தவர்களாலேயே நடக்கிறது என புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத 10 மாநிலங்களின் பட்டியலும் அண்மையில் வெளிவந்தன. அதில், கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதே போல் மேற்கு வங்கம், கர்நாடகா நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. மத்திய பிரதேசம் ஆறாவது இடத்திலும், ஆந்திர பிரதேசம் ஏழாவது இடத்திலும், உத்திரபிரதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளன. மேலும் டெல்லி மற்றும் சட்டீஸ்கர் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளது. 

 

 

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், “அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது.  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும்,காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.