எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

 

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும் மாற்றம் இருக்கும். அது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தனி செயலராக ஸ்டாலின் நியமித்தார். தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார்.

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

இவர்களைப் போல ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். குறிப்பாக செராபுதீன் என்கவுன்டர் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கைதுசெய்த சிபிஐ அதிகாரி கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமித்தது அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. அதேபோல முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நெருக்கமாக இருந்த பிரகாஷுக்கு பதிலாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்பேடி சிங் நியமிக்கப்பட்டார். தற்போது பிரகாஷ் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எடப்பாடியின் தனி செயலர்களாக இருந்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும் வெவ்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வரின் தனி செயலர்-1 சாய்குமார் ஐஏஎஸ் – தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமனம்

தனி செயலாளர்-2 விஜயகுமார் ஐஏஎஸ் – தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் (டான்சி) மற்றும் மேலாண் இயக்குநராக நியமனம்

தனி செயலர் – 4 ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் – தொழிற்சாலைகள் துறை சிறப்புச் செயலராக நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் – தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்