‘வேறு வழியின்றி 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி’ – மு.க ஸ்டாலின்

 

‘வேறு வழியின்றி 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி’ –  மு.க ஸ்டாலின்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என தனியார் பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கலந்தாய்வு நெருங்கிக் கொண்டே இருந்தது.

‘வேறு வழியின்றி 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி’ –  மு.க ஸ்டாலின்

இந்த நிலையில் தான், மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதம் கழித்து ஆளுநர் பன்வாரிலால் 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கனார். இதன் மூலமாக, 303 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆளுநருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என குறிப்பிட்டுள்ளார்.