மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

 

மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

பிரதமர் மோடி வாழ்த்து கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக 158 தொகுதிகளில் முன்னணியில் உள்ளநிலையில் அதிமுக, 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி பொறுப்பில் இல்லாத நிலையில் அதிமுக தமிழகத்தை ஆண்டு வந்தது. இந்த சூழலில் திமுகவுக்கு வெற்றி கிட்டியிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து; தேசத்தின் வளர்ச்சியையும், மாநிலத்தின் தேவைகளையும் கணக்கில் கொண்டு செயல்படுவோம் ; கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் , புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்று கூறியிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ” மாண்புமிகு பிரதமருக்கு நன்றி.
மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவேன்.
கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம், கொரோனாவை வென்று , தொற்றுநோய்க்கு பிந்தைய வளர்ச்சியை பட்டியலிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.