• April
    06
    Monday

Main Area

Mainவிபரீதமான சிஏஏ விஷயத்தில் விளையாட்டுத்தனமாக அறிக்கைவிட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ்! - ஸ்டாலின் விளாசல்

mkstalin
mkstalin

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் விளையாட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"திருத்தச் சட்டத்தை வலிந்து சென்று ஆதரித்து வாக்களித்து, இன்றைக்கு நாட்டையே கிளர்ச்சிக் களமாக்கி, இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” என்றும், “சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அதிமுக அரசு செய்யாது”என்று அலறித் துடித்து ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது, "குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்த கதையாக" இருக்கிறது.

ops eps


பொய் என் அரசியல் மூலதனம்; துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம் என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர்- “பொய் - அவதூறுப் பிரச்சாரங்களைத் தூண்டி விட்டு, இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க முயற்சிக்கிறது” என்று இன்னொரு கடைந்தெடுத்த “கோயபல்ஸ்” பிரசாரத்தைத் துவக்கியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

caa


முதலமைச்சரைப் பொறுத்தமட்டில் அவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதகங்களை வாக்களிக்கும் முன்பு படிக்கவே இல்லை என்பதும் படித்தறிய விரும்பவில்லை என்பதும், கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைத்திடும் ஊதுகுழலாகச் செயல்பட்டதும், இந்த அறிக்கை வாயிலாகவே தெரியவருகிறது. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் என்ன பாதிப்பு சொல்லுங்க” என்று சட்டமன்றத்தில் “வெற்று” ஆவேச முழக்கமிட்டார் முதலமைச்சர்.
என்.பி.ஆர் விவரங்கள் 'ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன' என்று சட்டமன்றத்தில் பச்சைப் பொய் சொன்னார் அமைச்சர் உதயகுமார். ஆனால் இப்போது , “தாய்மொழி, தந்தை, தாயார் பெயர்,பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றை தவிர்க்கலாம்” என்பதோடு மட்டுமின்றி, “ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம்”ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்றும் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள். என்.பி.ஆர் விவகாரத்தில் முதலமைச்சருக்கும்- அமைச்சர் உதயகுமாருக்குமே கருத்தொற்றுமை இல்லை, புரிதலும் இல்லை. எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல், நாடு எதிர்கொண்டுள்ள “விபரீதமான” பிரச்னையில் “விளையாட்டுத் தனமாக”அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

caa


2003 குடியுரிமை சட்ட திருத்தத்தில் “மத அடிப்படையிலான பிளவு” கொண்ட குடியுரிமை வழங்கும் திட்டம் இல்லை. அதன் அடிப்படையில் முதன்முதலாக எடுக்கப்பட்ட என்.பி.ஆரில் “மதரீதியாக பிளவு படுத்தி குடியுரிமை வழங்கும் பா.ஜ.க அரசின் 2019ஆம் வருட குடியுரிமைச் சட்டத் திருத்தம், புதிய என்.பி.ஆர் படிவம். பிறந்த தேதி கண்டுபிடிக்கும் கேள்வியில் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் புறக்கணிப்பு என்று எதுவும் இல்லை” என்ற அடிப்படை விவரத்தைக் கூட பழனிசாமி தெரிந்து கொள்ள நாட்டம் காட்டவில்லை. என்ன செய்வது? அவரது கவலை பதவியைக் காப்பாற்றிக் கொள்வது எஞ்சியிருக்கின்ற நாட்களில் எப்படி கஜானாவைக் காலி செய்வது என்பது மட்டுமே" என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.