தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு!

 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இன்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த திமுக, இந்தமுறை ஆளுங்கட்சியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்.அத்துடன் நேற்று 33 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலும் திமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு!

ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 2 பெண்களும்,2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் அமைச்சராக முதல் முறையாக பதவியேற்பவர்களில் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வராக பதவியேற்ற பிறகு மற்ற அமைச்சர்கள் 33 பேரும் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். கொரோனா காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது.அத்துடன் கொரோனா காலம் என்பதால் திமுக தொண்டர்கள் வீட்டில் இருந்தபடியே பதவியேற்பு விழாவை கண்டுகளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.