• February
    21
    Friday

Main Area

Main



பட்டம் கொடுப்பதை தடுப்பதன் மூலம் வைரமுத்துவை வீழ்த்த முடியாது -  ஸ்டாலின்

ஸ்டாலின் - வைரமுத்து
ஸ்டாலின் - வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை தடுப்பதன் மூலம் அவரை வீழ்த்திவிட முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 எஸ்ஆர்எம்  பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு வைரமுத்துவுக்கு டாக்டர் வழங்குவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையறிந்து கடுப்பான பாடகி சின்மயி, “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்குப் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம்” எனக்கூறி ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தார். எஸ்.ஆர். எம் அதனையடுத்து பல்கலைக்கழகம் சார்பிலும் மருத்துவர் பட்டம் வழங்கும் விழாவை ஒத்திவைத்தனர். எனக்கு பட்டம் கொடுக்க ராஜ்நாத் சிங் வராததால் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என கவிஞர் வைரமுத்து அதனை புறக்கணித்தார். 

mk stalin

இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் பல்கலைக்கழகம் சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் விழாவில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. ஆனால் அரசியல் பகைமை மற்றும் தமிழ் பகைமை காரணமாக சிலர் மத்திய அமைச்சரை நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்துள்ளனர். ஏற்கெனவே 3 டாக்டர் பட்டம் பெற்றவரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்துவை இதுபோன்ற செயல்களால் வீழ்த்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

மு.க. ஸ்டாலினுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கவிஞர் வைரமுத்து, “எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள  தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி. 
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?” என பதிவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.