செல்லும் வழியில் காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி சம்பவம்!

 

செல்லும் வழியில் காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு, தற்போது பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், மக்கள் அலட்சியத்துடன் இருக்காமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

செல்லும் வழியில் காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், மாஸ்க் அணியாமல் நின்று கொண்டிருந்த தம்பதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணியச் சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் முக ஸ்டாலின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் ஸ்டாலினை பார்க்க நின்று கொண்டிருந்தனர்.

அங்கு, வயதான ஒரு தம்பதியும் நின்று கொண்டிருந்தனர். இருவருமே மாஸ்க் அணிய வில்லை. இதைக்
கண்ட முதல்வர் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி காரிலிருந்து இறங்கி, அவர்களுக்கு மாஸ்க் கொடுக்குமாறு கூறினார். மேலும், அவர்களிடம் முகக் கவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதற்கு முன்னதாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பத்திரிக்கையாளர்கள் முறையாக மாஸ்க் அணியாததை பார்த்த ஸ்டாலின் அவர்களை முறையாக மாஸ்க் அணியுமாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.