ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு உதவுங்கள்! மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

 

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு உதவுங்கள்! மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை குறித்து யாருக்கும் அலட்சியம் கூடாது, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு உதவுங்கள்! மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா இரண்டாம் அலை மிக மோசமானதாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். அதற்கு ஊரடங்கு மிக அவசியமானது. ஊரடங்கு காலக்கட்டத்தில் அவசிய பயன்பாட்டுக்காக மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். அலட்சியம் எப்போதும், யாருக்கும் இருக்கக்கூடாது. ஊரடங்கு அறிவித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக்கூடாது. மக்களின் அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டும்.

உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன. அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும். கொரோனா மேலும் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காத்தல், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகிய மூன்று முக்கிய கடமைகளில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.