‘மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை’ – மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

‘மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை’ – மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புயல் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நேற்று கடலூர் மாவட்டத்திலும் இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் வெள்ள சேதங்களை பார்வையிட்டுஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினேன். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தோறும் மழை நீர் புகுந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் உள்ள வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கியும் விவசாயிகளும் மக்களும் துயரத்திலும் சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கும்பகோணம், தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு தண்ணீர் புகுந்துள்ளது.

‘மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை’ – மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பல இடங்களில் கரைகள் உடைத்து விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாக இருக்கின்றன. தூர்வாரும் பணிகள் நடைபெற்று ஊழலும் இந்த நிலைமைக்கு வித்திட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து உதவிகள் ஏதும் போய் சேரவில்லை என்ற குறையை கேட்க முடிந்தது. அரசு இயந்திரம் முழு வீச்சில் மீட்பு பணியில் இதுவரை ஈடுபடவில்லை. சென்னை புறநகர் பகுதிகளும் இன்னும் மீண்டதாக தெரியவில்லை. கழிவுநீரால் சுகாதார கேடுகளை இந்த கொரோனா காலத்தில் ஏற்படுத்தி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

‘மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை’ – மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நிதிகளை செலவு செய்து இருக்கிறார்கள்; ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. இதுவரை வந்த பல மத்திய குழுக்கள் பார்வையிட்டார்கள், நிதி வழங்கி பரிந்துரைத்தார்கள், ஆனால் தமிழகத்திற்கு பேரிடர் நிதிகள் வந்ததா?. மத்திய அரசு நிதிக்காகே காத்திராமல் மாநில அரசின் சார்பில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசிடம் உரிய நிதியை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.