‘ஓபிசி இடஒதுக்கீடு’ மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி- மு.க ஸ்டாலின்

 

‘ஓபிசி இடஒதுக்கீடு’ மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி- மு.க ஸ்டாலின்

ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய மருத்துவக்கல்வி இடங்களில், தமிழக ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50 % இட ஒதுக்கீடு இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ஓபிசி இடஒதுக்கீடு’ மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி- மு.க ஸ்டாலின்

அந்த அறிக்கையில்,” அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்வி இடங்களில் இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட பட்டியலில் மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதால் தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

‘ஓபிசி இடஒதுக்கீடு’ மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி- மு.க ஸ்டாலின்

மூன்று வருடங்களாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. நால்வர் கமிட்டி கூட்டத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டும் கடைசிவரை கொடுக்காமல் இழுத்தடித்து, சமூக அநீதிக்கு துணை போனது முதலமைச்சர் பழனிசாமி அரசு. மத்திய பாஜக அதிமுக அரசும் கூட்டணி வைத்து இட ஒதுக்கீடு உரிமையின் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.