“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தது.

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 25 லட்சமாகக் குறைத்து – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்றும் – நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது என்றும் முதல்வர் பழனிசாமியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.