மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

 

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மேகதாது அணை கட்டும் முடிவை நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முக ஸ்டாலின், “மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும். கர்நாடக முதல்வரின் அறிவிப்பு இரு மாநில நல்லுறவுக்கு உகந்த நிலைப்பாடு அல்ல. அவரின் அறிவிப்பு தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயல். மேகதாது அணை கட்டும் திட்டம் உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும். மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.