திமுகவுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு விழுந்தன- ஸ்டாலின்

 

திமுகவுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு விழுந்தன- ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. காலையில் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்துமுடிந்தது. தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு விழுந்தன- ஸ்டாலின்

இந்நிலையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவிலில் திமுகவுக்கு அளிக்க வாக்குகள் பாஜகவுக்கு விழுந்தன. வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகங்களில் பக்கில் எடுத்து சென்றனர். அதிகார துஷ்பிரயோகத்தையும் அராஜகத்தையும் திமுக கூட்டணி கட்சியினர் துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.

திமுக கூட்டணி கட்சியினர் மே 2 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை பாதுகாக்க வேண்டும். யாரேனும் அத்துமீறி மையங்களுக்குள் நுழைகிறார்களா என்பது பற்றி தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் விதிமுறைகள் நடந்தால் உடனடியாக கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.