பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்க வேண்டும்! திமுக தீர்மானம்

 

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்க வேண்டும்! திமுக தீர்மானம்

தி.மு.க. சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்பட்டது. காணொலி காட்சி ஆலோசனையில் லைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்க வேண்டும்! திமுக தீர்மானம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5,000-ம் என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு பதிலாக மீட்டர் வைக்கும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவ முதுநிலைப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்தை திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும், ஒருமித்த கருத்துள்ள அனைத்து கட்சிகளையும் பேசி போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.