Home தமிழகம் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது - ஸ்டாலின்

உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது – ஸ்டாலின்

அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது என திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-12-23-at-5.05.46-PM-1024x576.jpeg

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளைப் வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறம் என்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அதிமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்திவையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும்...

பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக...

“ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா கூறினார்”

சசிகலாவை முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி யுவராஜ், “சசிகலாவுடன் கழகத்தினர் ஒற்றுமையாக இருந்து...
TopTamilNews