கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் வெற்றி பெறவில்லை: மு.க.ஸ்டாலின்

 

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் வெற்றி பெறவில்லை: மு.க.ஸ்டாலின்

கலைஞர் நினைவு நாளையொட்டி, நடந்தப்பட்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின் மூலம் பெறப்பட்ட நுழைவு கட்டணம் 23 லட்சத்தை, கொரோனா நிவாரண நிதியாக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி நான் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மா.சுப்பிரமணியன் எப்போதும் கழகப்பணிக்காக ஓடிக்கொண்டிருப்பார். தற்போது, எல்லோரையும் ஓட வைத்துள்ளார். கொரோனாவினால் நாம் தற்பாதுகாப்புக்காக முக கவசம் அணிந்து வருகிறோம். அண்ணா அறிவாலயத்தில் இருந்து என்னால் கட்சி பணியாற்ற முடியவில்லை.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் வெற்றி பெறவில்லை: மு.க.ஸ்டாலின்

காணொலி காட்சி மூலம் தான் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்துக கட்சி தலைவர்களிடம் அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். கட்சி தொண்டர்களிடம் தினமும் காலை 1 மணி நேரம் யோகா, நடைபயிற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறேன். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில அரசு வெற்றிப்பெறவில்லை. கொரோனா பெயரை வைத்து தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது.