“சீட்டுக்கட்டு ஆடிய ஜெ – சசிகலா” : பாஜகவின் கார்ட்டூன் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்

 

“சீட்டுக்கட்டு ஆடிய ஜெ – சசிகலா” : பாஜகவின் கார்ட்டூன் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்

திமுகவை குற்றம் சாட்ட மோடிக்கு உரிமையில்லை என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“சீட்டுக்கட்டு ஆடிய ஜெ – சசிகலா” : பாஜகவின் கார்ட்டூன் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்

விழுப்புரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பால் முதல் பெரியவர்கள் குடிக்கும் மது வரை ஊழல் செய்தவர் ஜெயலலிதா ஊழல் மேல் ஊழல் செய்த ஆட்சிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. இதை 2016 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி மதுரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அந்த தேர்தலில் தமிழக பாஜக ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை முதலமைச்சர் சந்திக்க மறுத்துவிட்டார் . அதை வைத்து ஒரு பத்திரிக்கை கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது. அம்மா அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருக்காருமா, ஏதோ திட்டங்கள் குறித்து பேசணுமாம் என்று வீட்டு பணியாளர் சொல்வதுபோலவும், உடனே அங்கிருந்து சசிகலா வந்து இவங்களுக்கு வேற வேலையே கிடையாது , அம்மா பிஸியாக இருக்காங்க அப்படின்னு சொல்லு என்று சொல்வது போல் அது கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதாவும் ,சசிகலாவும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது போல இந்த படம் வரையப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலலிதா இறந்துவிட்டதால் மோடி இங்க வந்து அவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்” என்றார்.

“சீட்டுக்கட்டு ஆடிய ஜெ – சசிகலா” : பாஜகவின் கார்ட்டூன் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற பல நாடகங்களை பார்த்து பார்த்து பழகியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். தனது கொள்ளையில் இருந்து தப்ப மோடியை ஆதரிக்கிறார் எடப்பாடி. அதிமுக தொண்டர்களை ஏப்பம் விட வந்திருக்கிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் அறிவார்கள் . மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்; ஏமாற மாட்டார்கள். திமுகவை குற்றம் சாட்ட மோடிக்கு உரிமையில்லை. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா வகைகளிலும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதை மறைப்பதற்காக புதிய புதிய கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார் பழனிசாமி. பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கிறார் ” என்றார்.

“சீட்டுக்கட்டு ஆடிய ஜெ – சசிகலா” : பாஜகவின் கார்ட்டூன் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்

முன்னதாக நேற்று கோவை கொடிசியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. திமுக தன் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. திமுக மக்களால் நிராகரிக்கப்பட்டதாக மாறிவிட்டது. எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்; மற்ற மாநிலங்களில் செய்த நலத்திட்டங்களை இங்கும் செயல்படுத்துவோம்” என்றார்