“எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” – மு.க ஸ்டாலின் காட்டம்!

 

“எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” – மு.க ஸ்டாலின் காட்டம்!

கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் டி.ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட பல திமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

“எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” – மு.க ஸ்டாலின் காட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், ” எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கேடு மசோதா நிறைவேறி 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தாமதம் செய்தால் அதிமுக அரசு கைவிட்டு விடும் என ஆளுநர் நினைக்கிறார்” என்று கூறினார்.

மேலும், ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன் என்றும் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.