“விவசாயிகள் படும் துன்பம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” – மு.க.ஸ்டாலின்

“விவசாயிகள் படும் துன்பம்  இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” – மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விவசாயிகள் படும் துன்பம்  இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” – மு.க.ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரமாக இன்று தென்காசி மாவட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது பேசிய அவர், “விவசாய கடன்களை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தடைவாங்கிய முதல்வர் பழனிசாமி இப்போது தேர்தலுக்காக ரத்து செய்வதாக அறிவிக்கும் நம்பிக்கை துரோகத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“விவசாயிகள் படும் துன்பம்  இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” – மு.க.ஸ்டாலின்

ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் பழனிசாமி. விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் அவருக்கு தெரிய வந்ததா? மூன்று மாதத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களிடம் பெற்றுள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும் . கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் ஒப்புகைச்சீட்டு கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம் ” என்றார்.

முன்னதாக சென்னை போரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் பழனிசாமி, “தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது தான் அதிமுக அரசு. விவசாயிகளின் சிரமங்கள் குறித்து எனக்குத் தெரியும் என்பதால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.