‘கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கல..’ – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

 

‘கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கல..’ – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, 50 ஆண்டுகால அரசியலை பார்த்தவன் நான். 14 வயதிலேயே கோபாலபுரத்தின் வீதிகளில் ஓடி எனக்கென ஒரு இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டு படிப்படியாக அரசியலை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, திமுக தலைவரானேன். கருணாநிதி ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

‘கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கல..’ – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

ஜாதி, மதமின்றி மக்கள் ஒன்றுபட்டு வாழ பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்தினார். சமத்துவபுரம் என்ற திட்டத்தை பெரியார் பெயரில் ஏற்படுத்தினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும் என்று கூறினார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி மக்களுக்காக செயல்படுத்தப்படவிருக்கும் நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார்.

‘கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கல..’ – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய அவர், பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருணாநிதியின் விருப்பத்தை செய்ய விடாமல் தடுத்தவர்கள். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் நீதிமன்றம் வரையில் சென்று மெரினாவிலேயே கருணாநிதியை அடக்கம் செய்தோம். கருணாநிதிக்கு இடம் கொடுக்காத பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்கலாமா? என உரக்க கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அங்கிருந்து மக்கள் கூட்டமே ஸ்தம்பித்து போனது.