ஓபிஎஸ் ஒன்னும் தியாகி இல்லை! அவர் ஏன் ஈபிஎஸ்- ஐ முதல்வர் வேட்பாளராக்கினார் தெரியுமா?- ஸ்டாலின்

 

ஓபிஎஸ் ஒன்னும் தியாகி இல்லை! அவர் ஏன் ஈபிஎஸ்- ஐ முதல்வர் வேட்பாளராக்கினார் தெரியுமா?- ஸ்டாலின்


பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய தினமான செப் 14 ஆகியவற்றை மையப்படுத்தி திமுகவின் திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முப்பெரும் விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் தமிழக அமைச்சரவை ஒரு கிரிமினல் கேபினேட். கரப்சன் கேபினேட். ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. நான்காயிராம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை முதலமைச்சர் பழனிச்சாமி தனது உறவினர்களுக்கும் பினாமிகளுக்கும் மட்டுமே வழங்கியுள்ளார். அ.தி.மு.க தோல்வி அடையும் என தெரிந்ததால் தான் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை, முதலமைச்சர் வேட்பாளராக பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம் தியாகி அல்ல.எடப்பாடி மீண்டும் வெற்றி பெற போவதும் இல்லை, இந்த அமைச்சரவையில் அதிகமாக சம்பாதித்தது எஸ்.பி.வேலுமணி தான்.

ஓபிஎஸ் ஒன்னும் தியாகி இல்லை! அவர் ஏன் ஈபிஎஸ்- ஐ முதல்வர் வேட்பாளராக்கினார் தெரியுமா?- ஸ்டாலின்

சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கான பணம்,தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது. இலவச வேட்டி சேலை தொடங்கி எல்லாவற்றிலும் இந்த ஆட்சியில் முறைகேடு. முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் ஊழல் புகார்களில் சிக்கி உள்ளனர். தான் அடிக்கும் கொள்ளைகளை மறைக்கவே நானும் விவசாயி தான் என எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. புதிய கல்வி கொள்கையால் கல்வி உரிமை, நீட் தேர்வால் மருத்துவ படிப்பு, வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்றவை பறிபோய் விட்டது. சட்டமன்றமாக இருந்தாலும்,நாடாளுமன்றமாக இருந்தாலும்,நீதிமன்றமாக இருந்தாலும்,மக்கள் மன்றமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் சமூக நீதியையும் காக்க வேண்டும்” எனக் கூறினார்.