மத்திய அரசு ஓர் கந்துவட்டி அரசு! முதல்வருக்கு ஓபிஎஸ் உடன் சண்டை போடவே நேரம் போதவில்லை: ஸ்டாலின்

 

மத்திய அரசு ஓர் கந்துவட்டி அரசு! முதல்வருக்கு ஓபிஎஸ் உடன் சண்டை போடவே நேரம் போதவில்லை: ஸ்டாலின்

திருவள்ளூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் கட்சியை வளர்த்த முன்னோடிகளுக்கு முப்பெரும் விழா மூலம் பொற்கிழிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இணையம் வழியாக திமுகவில் 11 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எவ்வாறு இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என ஒப்பிட்டு பார்த்தால் திராவிட இயக்கத்தின் சாதனை என்னவென தெரியும்

உத்தர பிரதேசம், பீகாரை தமிழகத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட முடியுமா? ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், ஆவடி தொழிற்பேட்டைகளாக மாறியிருப்பதற்கு கருணாநிதி தான் காரணம். 6 மாதத்தில் ஆட்சி முடிய போகிறது. 2011 முதல் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன திட்டம் செய்தார்கள். வெளிநாடுகளுக்கு போனார்களே.?அதனால் என்ன பயன்? எடப்பாடி செய்தி தாள் படிப்பதில்லை என நினைக்கிறேன். தொழில் தொடங்க உகந்த மாநில பட்டியலில் தமிழகத்திற்கு 14வது இடம். கருணாநிதி ஆட்சியில் 3வது இடத்தில் இருந்தோம்.

மத்திய அரசு ஓர் கந்துவட்டி அரசு! முதல்வருக்கு ஓபிஎஸ் உடன் சண்டை போடவே நேரம் போதவில்லை: ஸ்டாலின்

மாநிலத்தின் உரிமையை எடப்பாடி அரசு காவு கொடுக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிப்பதில்லை. ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களுக்கு அநீதியை விளைவிக்கிறது. ஜி.எஸ்.டி யால் மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தாமதமாக தருகிறது. இது மத்திய அரசா கந்து வட்டி அரசா. இதையெல்லாம் கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் இல்லை. பன்னீர் செல்வதோடு சண்டை போடவே நேரம் போதவில்லை என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.