பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம்- ஸ்டாலின்

 

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம்- ஸ்டாலின்

உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட திமுக திமுக மகளிரணி மெழுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர், இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம்- ஸ்டாலின்

பேரணியில் தொடங்கி வைத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தியை கீழே தள்ளவில்லை. ஜனநாயகத்தை கீழே தள்ளியுள்ளார்கள். பெண்கள் அதிகம் பாதிக்கப்பட கூடிய மாநிலம் முதல் இடம் உத்தர பிரதேசமும், இரண்டாவது இடத்தில் தமிழகமும் உள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். இதுவரை அதற்கு நீதியோ அல்லது நியாயம் கிடைக்கவில்லை. அந்த சம்பவத்தில் ஆளுங்கட்சிக்கு வேண்டிய நபர் என்பதால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. உத்திரபிரதேசம் ரத்த பிரதேசமாக மாறி வருகிறது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் எதிர்நோக்கியுள்ளோம். அதில் திமுக தான் ஆட்சிக்கு வர போகிறது” எனக் கூறினார்.