ஆட்சிக்கு வந்தால் ஹெலிகாப்டர் தருவதாக கூட அதிமுகவினர் சொல்வார்கள்: முக ஸ்டாலின்

 

ஆட்சிக்கு வந்தால் ஹெலிகாப்டர் தருவதாக கூட அதிமுகவினர் சொல்வார்கள்: முக ஸ்டாலின்

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை அரசியல் தலைவர்கள் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் ஹெலிகாப்டர் தருவதாக கூட அதிமுகவினர் சொல்வார்கள்: முக ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சுனாமி அலை வீசுகிறது. தேர்தலையொட்டிவந்த அனைத்து கருத்துக்கணிப்பும் திமுகவுக்கு ஆதரவாகதான் இருக்கிறது. தாரபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தான் பொள்ளாச்சி. பிரதமர் வந்த போது பொள்ளாச்சி எங்கு இருக்கிறது என்று தெரியாதா?. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் சொல்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஹெலிகாப்டர் தருவதாக கூட சொல்வார்கள். நான் என்ன சொல்வேன் என xerox மெஷினுடன் எடப்பாடி காத்திருக்கிறார்.

நான் மேயராக இருந்த போது 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சிங்கார சென்னை, சீரழிந்ந சென்னையாக மாறிவிட்டது. கலைஞருக்கு மருத்துவம் பார்த்தவர் டாக்டர் எழிலன், என்னை முதன்முதலில் எம்எல்ஏ ஆக்கியது ஆயிரம் விளக்கு தொகுதிதான். நானும் மயிலாப்பூர் வாக்களார் தான்” என தெரிவித்தார்.